வியூகம் வகுக்கும் வைகோ , நேர்காணலை தொடங்கினார்

election vaiko dmk plan
By Jon Mar 11, 2021 05:44 AM GMT
Report

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்பாளர் பட்டியல் உள்ளிட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் திமுக கூட்டணியில் உள்ள மதிமுக, தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்ய நேர்காணலை தொடங்கியுள்ளது.

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் வைகோ நேர்காணலை நடத்தி வருகிறார்.

திமுக கூட்டணியில் மதிமுக வாசுதேவநல்லூர், மதுரை தெற்கு, பல்லடம், சாத்தூர், அரியலூர் மற்றும் மதுராந்தகம் ஆகிய இடங்களில் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.