மதிமுக எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய சொன்னாரா முதல்வர் விஜய்? வைகோ விளக்கம்
மதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தால் இடைத்தேர்தலில் அவர்களுக்காக பிரச்சாரம் செய்வதாக விஜய் கூறினார் என வைகோ பேசியுள்ளார்.
எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய சொன்ன விஜய்?
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட மதிமுக, தற்போது திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது.
வைகோவின் இந்த முடிவுக்கு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதிமுகவின் கடையநல்லூர் எம்.எல்.ஏ தி.மு. இராசேந்திரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, "உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்பந்திக்கப்பட்டோம். கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு இந்த நிர்பந்தம் இல்லை.

மதிமுக இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் தவெகவிற்கு ஆதரவளிக்கும்.
மதிமுகவின் 2 எம்.எல்.ஏ.க்களும்ராஜினாமா செய்தால், இடைத்தேர்தல் வரும். அப்படி இடைத்தேர்தல் வந்தால் நானே வந்து அவர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறேன் என முதல்வர் விஜய் சொன்னார்.

ஆனால் 2 பேரிடமும் சொன்னபோது செந்தில் செல்வன் பதிலே சொல்லவில்லை. அவர் திமுகவில் தான் இருக்கபோகிறேன் என போய்விட்டார். ராஜேந்திரன் நான் மதிமுகவில் தான் இருப்பேன். ஆனால், எம்.எல்.ஏ.வாக தொடர்வேன் என கூறிவிட்டார்.
இது குதிரைபேரம் இல்லையா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இப்போது குதிரை பேரம் நடத்தி தான் அவங்க ஒரு எம்எல்ஏவை கொண்டு போனாங்களா? அது குதிரை பேரமா? ஒட்டக பேரமா? உங்கள் கேள்விக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
2 நாட்களுக்கு முன் திருமணத்தில் ஸ்டாலினை சந்தித்தேன். என் அருகே சோபாவில் இடம் இருந்தும் அமராமல் இருந்தார். ஏன் என்று தெரியவில்லை. ஆனால் அவர் சீமானிடம் பேசி கொண்டிருந்தார். அதன்பிறகு என் பக்கம் கூட அவர் திரும்பி பார்க்கவில்லை" என பேசியுள்ளார்.
ஸ்டாலின் என் பக்கம் திரும்பவே இல்லை என்கிறார் வை.கோ. 😡
— shanmugamchinnaraj (@shanmugamchin10) June 27, 2026
அவர், எப்படிப்பட்ட பொய்யர் என்று இன்றைய தலைமுறை உணர வேண்டாமா, இதோ வைகோவுடன் மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டு இருந்த காட்சி..💯
அரசியல் ஆதாயம் பெற, அப்பட்டமான பொய்யை பேசும் அற்ப மனிதர் வைகோ என்பதை, ஏற்கனவே தெரிந்து வைத்திருக்கும்… pic.twitter.com/LaIOX8GdDL
ஆனால், அந்த திருமண நிகழ்வில் வைகோவுடன் மு.க.ஸ்டாலின் பேசும் வீடியோவை திமுகவினர் பகிர்ந்து வருகின்றனர்.