ரூ.1,000 கோடி கொடுக்க முன்வந்தும் முதல்வர் விஜய் சம்மதிக்கவில்லை - வைகோ
vaiko says cm vijay refuse to meet anil agarwal: அணில் அகர்வால் ரூ.1,000 கோடி கொடுக்க முன்வந்தும் முதல்வர் விஜய் சந்திக்க சம்மதிக்கவில்லை என வைகோ பேசியுள்ளார்.
அவர் அமைச்சர் என்றே தெரியாது
கோவையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

இதில், நேற்று வி.எஸ். பாபு இறுதி ஊர்வலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனை தள்ளிவிட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
தற்கு பதிலளித்த அவர், "முதலமைச்சர் விஜய் தன்னுடன் நடந்து வருமாறு என்னை அழைத்ததால் அவருடன் சென்றேன். அவர் மீது துரும்பு கூட படாமல் நான் பாதுகாப்பாக இருந்தேன். நான் கொடுக்கும் பாதுகாப்பை 100 பேர் சேர்ந்து கூட கொடுக்க முடியாது.
கூட்ட நெரிசலில் யாரோ ஒருவர் தேவையில்லாமல் குறுக்கே புகுந்து என் கையைப் பிடித்து இழுத்தார். அவர் யார் என்றே எனக்குத் தெரியாது. அமைச்சரா என்றுகூட தெரியாது. அதனால் உன் வேலையை பார்த்துட்டு போ என்று கூறினேன். யாரையும் நான் தள்ளிவிடவில்லை" என தெரிவித்தார்.
ரூ.1000 கோடி கொடுத்ததும் விஜய் சம்மதிக்கவில்லை
மேலும், சில நேர்மையற்ற அதிகாரிகள் பணியிட மாற்றங்கள் மூலம் கிடைக்கும் வருமானம் தடைபட்டுள்ள ஆத்திரத்தில் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
ரூ.500 கோடி, ரூ.1,000 கோடி கொடுத்து எல்லா முதலமைச்சர்களையும் கவிழ்க்க முடிந்த ஸ்டெர்லைட் அணில் அகர்வால், விஜய்யை சந்திக்க தலைகீழாக நின்றார். விஜய் அனுமதிக்கலையே.. இதை விட முதல்வர் விஜய்யின் நேர்மைக்கு என்ன ஆதாரம் வேண்டும்" என பேசினார்.