ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர்: வைகோ
இந்திய அளவில் நடைபெறும் தேர்தலில் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளராக இருக்க முடியும், தமிழக முதலமைச்சர் விஜய்க்கு கற்பனையில் கூட அந்த எண்ணம் இருக்காது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், முதலமைச்சர் விஜய் ஊழலற்ற அரசாக நடத்தி வருகிறார், எந்த அலுவலகத்துக் சென்றாலும் பொதுமக்கள் பணம் கொடுக்க வேண்டியதில்லை.
100 நாட்களை கடந்த தவெக அரசுக்கு 100க்கு 80 மதிப்பெண்கள் வழங்குகிறேன்.தமிழக அரசுக்கு எனது நற்சான்றை வழங்குகிறேன்.
தமிழக அரசு ஊழலை ஒழிக்கும் நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

மேலும் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் கற்பனையில் கூட பிரதமர் ஆவது நினைக்க மாட்டார், இந்திய அளவில் நடைபெறும் தேர்தலில் ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளராக கண்டிப்பாக இருக்க முடியும், அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிக்காமல் இருக்க முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும் என தெரிவித்தார்.