தவெக கூட்டணியில் இணையும் மதிமுக? முதல்வரை சந்தித்த பின் வைகோ பதில்
தவெக கூட்டணியில் மதிமுக இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், முதல்வரை சந்தித்த பின் வைகோ அது குறித்து பதிலளித்துள்ளார்.
தவெக கூட்டணியில் மதிமுக?
திமுக கூட்டனில் இருந்து தேர்தலை சந்தித்த காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விசிக உள்ளிட்ட கட்சிகள் தவெக அரசில் இணைந்துள்ளது.
மேலும், அதிமுகவை சேர்ந்த 4 எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு, தவெகவில் இணைந்துள்ளனர்.

இதே போல், திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவும் தவெக கூட்டணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவ்வாறு இணைந்தால், மதிமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 2 எம்.எல்.ஏகளும் பதவியை ராஜினாமா செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை சந்தித்த நிலையில், இன்று தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய்யை சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேசியது அரசியல் முக்கியதுவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
வைகோ பதில்
இந்த சந்திப்பு குறித்து பேசிய வைகோ, "ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்க கூடாது என வலியுறுத்தியதாகவும், தனது நாடாளுமன்ற உரை புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள முதல்வர் விஜய்க்கு அழைப்பு விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மதிமுகவை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய உள்ளார்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, "யூகங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது" என தெரிவித்துள்ளார்.
மேலும், மதிமுக திமுக கூட்டணியிலிருந்து விலகி தவெகவில் இணைய உள்ளதா என்ற கேள்விக்கு, பொதுக்குழுவில் இது குறித்து விவாதித்து முடிவெடுப்போம்" என தெரிவித்துள்ளார்.
நாளை தமிழ்நாடு சட்டப்பேரவை கூட உள்ள நிலையிலும், வரும் ஜூன் 27 ஆம் திகதி மதிமுக பொதுக்குழு கூட உள்ள நிலையிலும் இந்த சந்திப்பு முக்கியதுவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.