பொய்யும் புரட்டும் கலந்த முழு சந்தர்ப்பவாதி வைகோ - காயத்ரி ரகுராம் கடும் விமர்சனம்

vaiko bjp mdmk gayathri
By Jon Mar 07, 2021 07:07 AM GMT
Report

பொய்யும் புரட்டும் கலந்த முழு சந்தர்ப்பவாதிதான் வைகோ என்று நடிகையும் பாஜக பிரபலமான காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். இவரின் பேச்சு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவுக்கு நேற்று 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ளது.

அதுமட்டுமின்றி அந்த 6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஒப்புக்கொண்டிருக்கிறார். இதுகுறித்து பாஜக பிரபலம் காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், ஊருக்கு கடவுள் மறுப்பு கொள்கை பேசிவிட்டு குடும்பத்தோடு மதம்மாறி மக்களை ஏமாற்றினீர்கள்.

திமுகவில் இருந்து விலகி ஈழ தமிழர்களுக்கும் தமிழகத்துக்கும் திமுக துரோகம் செய்துவிட்டது என கிளம்பி, தனி சின்னத்தில் தான் போடியிடுவேன் என தொண்டர்களை ஏமாற்றிவிட்டு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் முடிவெடுத்துள்ள வைகோ அவர்களே பொய்யும் புரட்டும் கலந்த முழு சந்தர்ப்பவாதி நீங்கள். உங்களுக்காக உயிர் தியாகம் செய்தவர்களின் ஆன்மாக்கள் உங்களை மன்னிக்காது என்று பதிவிட்டிருக்கிறார்.


Gallery