உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் மதிமுக- வேட்பாளர்களின் பட்டியல் வெளியானது
people
vaiko
dmk
vote
By Jon
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. திமுக சார்பில் கூட்டணி கட்சிகளுக்கு 61 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது, தொகுதி பங்கீடு முடிவடைந்திருக்கும் நிலையில் கூட்டணி கட்சிகள் போட்டியிட உள்ள தொகுதிகள் இறுதி செய்யப்படும் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தன.
மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகள்
வாசுதேவநல்லூர் (தனி) - சதன் திருமலைக்குமார்
சாத்தூர் - ரகுராம்
அரியலூர் - சின்னப்பா
பல்லடம் - முத்து ரத்தினம்
மதுராந்தகம் (தனி) - மல்லை சத்யா
மதுரை தெற்கு - பூமிநாதன்