முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்த வைகோ!
தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்காக மதிமுக சார்பில் ரூ.10 லட்சம் வழங்குவதாக அக்கட்சி பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கமாறு அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் முதல்வர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த நிதி கொரோனா தடுப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் அனைத்து செலவினங்களும் வெளிப்படையாக பொதுவெளியில் வெளியிடப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் கொரோனா நிவாரண நிதிக்காக மதிமுக சார்பில் ரூ.10 லட்சம் வழங்குவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தெரிவித்துள்ளார்.
வைகோ வெளியிட்டுல்ள அறிக்கையில்: கொரோனாவால் ஏற்படுத்தி இருக்கின்ற பாதிப்புகளை எதிர்கொள்ள, தமிழ்நாடு அரசு மேற்கொள்ளவுள்ள மருத்துவப் பணிகளுக்கு, தாராளமாக நிதி வழங்குமாறு முதலவர் விடுத்திருந்த அழைப்பை ஏற்று, மதிமுக சார்பில், ரூ.10,00,000 நிதி வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
