கோட்சேவை புகழ்ந்து பேசிய கிரிராஜ் சிங் பதவி விலக வேண்டும் - வைகோ வேண்டுகோள்..!

Mahatma Gandhi Vaiko Government Of India
By Thahir Jun 10, 2023 11:54 AM GMT
Report

தேசப்பிதா மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை புகழ்ந்து பேசிய கிரிராஜ் சிங் தவி விலக வேண்டும் என வைகோ கோரிக்கை.

பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்

மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவை புகழ்ந்து பேசிய மத்திய பாஜக அமைச்சர் கிரிராஜ் சிங் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், நாதுராம் கோட்சே நாட்டின் மரியாதைக்குரிய நபர் என கூறி மத்திய அமைச்சர் பாஜக அமைச்சர் கிரிராஜ் சிங் மன்னிப்பு கேட்டு, உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

Vaiko condemns Union Minister

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இந்துத்துவ சனாதன சக்திகள் காந்தியை கொன்ற கோட்சேவை புகழ்வது கண்டனத்துக்குரியது.

காந்தியின் கொலைக்கு உடந்தையாக இருந்த சாவர்க்கர் போன்றோரை புகழ்ந்து பேசுவது கடும் கண்டனத்துக்குரியது.

அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் 

எனவே, தேசப்பிதா மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை புகழ்ந்து பேசிய கிரிராஜ் சிங் மன்னிப்பு கேட்க வேண்டும், அதுமட்டுமில்லாமல் உடனடியாக பதவி விலக வேண்டும் என தெரிவித்துள்ளார்.

நேற்று பீகாரில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது, நாதுராம் கோட்சே இந்தியாவின் மரியாதைக்குரிய நபர், பாபர், ஒளவரசிங் போன்ற முகலாயர்கள் போல் படையெடுத்து வந்தவர் அல்ல என்றும் தங்களை பாபர்,

ஒளவரசிங் வழித்தோன்றல்கள் என கூறுவோர் பாரத அன்னையின் மகனாக இருக்க முடியாது எனவும் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பேசியிருந்ததாக கூறப்படுகிறது.