செத்துப்போன மொழிக்கு உயிர்கொடுக்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் எதற்கு? வைகோ ஆவேசம்! அதிர்ச்சியில் மக்கள்!

mdmk kendriya vidyalaya school vaiko against
By Anupriyamkumaresan Jul 07, 2021 08:58 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in கல்வி
Report

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆறாம் வகுப்பில் இருந்து சமஸ்கிருதம்தான் விருப்பப் பாடம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செத்துப்போன மொழிக்கு உயிர்கொடுக்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் எதற்கு? வைகோ ஆவேசம்! அதிர்ச்சியில் மக்கள்! | Vaiko Aginst Kendriyavidyalaya School For Sanskrit

இது குறித்து மதிமுக பொது செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழை ஒழித்துக்கட்ட, நரேந்திர மோடி அரசு மேற்கொண்டுள்ள முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்றும், நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, இந்தியாவில் ஒற்றை ஆட்சியை நிலைநிறுத்த அனைத்து வழிகளிலும் மிகக் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த முயற்சிகளுள் ஒன்றுதான், செத்துப் போன சமஸ்கிருத மொழிக்கு உயிர் கொடுக்கும் திட்டம் ஆகும் என்றும், இந்திய மக்கள் தொகைக் கணக்கின்படி, வெறும் 24000 பேர் மட்டுமே பேசுகின்ற அந்த மொழியை, 135 கோடி மக்களின் நாக்குகளில் திணிக்க முயற்சிக்கின்றார்கள் எனவும் ஆவேசமாக கூறியுள்ளார்.

செத்துப்போன மொழிக்கு உயிர்கொடுக்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் எதற்கு? வைகோ ஆவேசம்! அதிர்ச்சியில் மக்கள்! | Vaiko Aginst Kendriyavidyalaya School For Sanskrit

எனவே, இந்தப் பிரச்சினையில், தமிழக அரசு உடனே கவனம் செலுத்த வேண்டும், தமிழ் மொழி கற்பிக்காத பள்ளிகளுக்குத் தமிழ்நாட்டில் இடம் இல்லை என அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.