விதிமுறையை மீறியதால் அதிமுக வேட்பாளர் வைகைச்செல்வன் மீது வழக்குப்பதிவு
police
aiadmk
violating
Vaigaichelvan
By Jon
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக வைகைச்செல்வன் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். தற்போது, அதிமுக வேட்பாளர் வைகைச்செல்வன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தேர்தல் விதிமுறைகளை மீறி பொம்மையாபுரம் கிராமத்தில் நேற்றிரவு 10 மணிக்கு மேல் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாக போலீசாரிடம் புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அருப்புக்கோட்டை அதிமுக வேட்பாளர் வைகைச்செல்வன் மீது வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.