வைகை ஆற்றை சுத்தம் செய்து வரும் விஜய் ரசிகர்கள் - குவியும் பாராட்டு
மதுரையின் அடையாளங்களில் ஒன்றாக பார்க்கப்படுவது சித்திரை திருவிழாதான்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா இந்த ஆண்டு வரும் ஏப்ரல் 05ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்க இருக்கிறது.
இதனையடுத்து, ஏப்ரல் 14ம் தேதி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறும். இதன் பின்பு, ஏப்ரல் 16ம் தேதி ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருறல் நிகழ்ச்சி நடைபெறும். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவிற்கு பல லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு வந்து தரிசனம் பெற்று செல்வார்கள்.
இந்த நிகழ்ச்சி நடைபெற இருப்பதால், வைகை ஆற்றில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற விஜய் ரசிகர்கள் களத்தில் குதித்துள்ளனர். வைகை ஆற்றையும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் இருக்கும், குப்பைகளையும், பிளாஸ்டிக் கழிவுகளையும் விஜய் ரசிகர்கள் அப்புறப்படுத்தி வருகிறார்கள்.
விஜய் ரசிகர்களின் இந்த செயலுக்கு பலர் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர்.