ஹீரோவை மாற்றிய நிலையில் பாதியில் நிறுத்தப்பட்ட பிரபல சீரியல் - ரசிகர்கள் அதிர்ச்சி
விஜய் டிவியின் பிரபல சீரியலான வைதேகி காத்திருந்தாள் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ் தொலைக்காட்சிகளில் சீரியல், ரியாலிட்டி ஷோ ஆகியவற்றை ஒளிபரப்பு செய்வதில் விஜய் டிவிக்கு தனி இடம் உண்டு. அதன் பெரும்பாலான நிகழ்ச்சிகள் டிஆர்பி விஷயத்தில் மற்ற சேனல்களுக்கு சவால் விடும் வகையில் இருக்கும்.
இதனிடையே சமீபத்தில் விஜய் டிவியில் வைதேகி காத்திருந்தாள் என்ற சீரியல் தனது ஒளிபரப்பை தொடங்கியது. இதில் பிரஜின் கதாநாயகனாகவும், சரண்யா கதாநாயகியாகவும் நடித்தனர். ஆனால் பிரஜின் கடந்த வாரம் அந்த சீரியலில் இருந்து திடீரென விலகினார். சினிமா படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் சீரியலுக்கு தேதிகள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதற்கு விளக்கம் ஒன்றையும் அவர் அளித்தார்.
இதையடுத்து வைதேகி காத்திருந்தாள் தொடரில் ராஜபார்வை சீரியலில் நடித்திருந்த முன்னா ஒப்பந்தமானார். அவர் நடிக்க ஆரம்பித்து ஒரு வாரமே ஆன நிலையில் தற்போது அந்த சீரியல் நிறுத்தப்பட்டிருக்கிறது. டிஆர்பி குறைந்ததே இதற்கு காரணமாக சொல்லப்படுகி்றது. சீரியல் நிறுத்தப்பட்டதால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.