24 பந்துகளில் அரைசதம் விளாசிய வைபவ் சூர்யவன்சி: U19 உலகக்கோப்பையில் மிரட்டல்

Indian Cricket Team Zimbabwe national cricket team Vaibhav Suryavanshi
By Sivaraj Jan 27, 2026 09:28 AM GMT
Report

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான U19 உலகக்கோப்பையில் வைபவ் சூர்யவன்ஷி அதிரடி அரைசதம் விளாசினார். 

ஜிம்பாப்வே அணி பந்துவீச்சு

புலவாயோவில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான U19 உலகக்கோப்பை போட்டி நடந்து வருகிறது. 

டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியில் ஆரோன் ஜார்ஜ் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

வைபவ் சூர்யவன்ஷி

ஆரோன் ஜார்ஜ் 23 (16) ரன்களில் அவுட் ஆக, வைபவ் சூர்யவன்ஷி சிக்ஸர்களை பறக்கவிட்டார்.

இதன்மூலம் இந்திய அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்து 67 பந்துகளில் 100 ரன்களை எட்டியது.

வைபவ் சூர்யவன்ஷி 24 பந்துகளில் அரைசதம் விளாசினார். பின்னர் அவர் 30 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.  

Vaibhav Suryavanshi Getty Imges