வைபவ் சூர்யவன்ஷியால் இந்தியாவுக்காக விளையாடமுடியாது - என்ன சிக்கல்?

Rajasthan Royals Indian Cricket Team IPL 2025
By Sumathi May 01, 2025 07:12 AM GMT
Report

வைபவ் சூர்யவன்ஷியால் இந்தியாவுக்காக விளையாட முடியாது.

வைபவ் சூர்யவன்ஷி

பீகாரின் சமஸ்திபூரைச் சேர்ந்தவர் வைபவ் சூர்யவன்ஷி. ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் இவர் ஆடிய 3 இன்னிங்ஸ்களிலும் அசத்தி விட்டார். 35 பந்துகளில் அடித்த சதம் பல முன்னாள் வீரர்களையும் வாயடைத்து போகவைத்துள்ளது.

vaibhav suryavanshi

எனவே, இவர் விரைவில் இந்திய அணிக்காக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஐ.சி.சி விதியால் இந்திய அணிக்கு தேர்வாக முடியாத நிலை உள்ளது. அதன்படி, கிரிக்கெட்டில் ஒரு வீரர் விளையாட 15 வயதே தகுதியான வயது.

குல்தீப் யாதவுக்கு தடை? ரிங்கு சிங்கை கன்னத்தில் அறைந்த விவகாரம் - வீடியோ வைரல்

குல்தீப் யாதவுக்கு தடை? ரிங்கு சிங்கை கன்னத்தில் அறைந்த விவகாரம் - வீடியோ வைரல்

ஐ.சி.சி விதி

இது U 19 கிரிக்கெட் உட்பட சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு பொருந்தும். ஐபிஎல் மற்றும் ரஞ்சி டிராபி போன்ற உள்ளூர் கிரிக்கெட்டுக்கு இந்த விதிகள் பொருந்தாது என்பதால் தற்போது வைபவ் ஐபிஎல் போட்டிகளில் ஆடி வருகிறார்.

வைபவ் சூர்யவன்ஷியால் இந்தியாவுக்காக விளையாடமுடியாது - என்ன சிக்கல்? | Vaibhav Suryavanshi Cannot Play Indian Team Reason

ஆனால், 15 வயதுக்கு கீழ் உள்ள ஒரு வீரரை விளையாட வைக்க விரும்பினால் அதனை சம்பந்தப்பட்ட நாடு ஐசிசியிடம் கோரிக்கையாக வைக்கலாம். அவ்வாறு கோரிக்கை வைக்கும் பட்சத்தில் அவர் இந்திய அணியில் அறிமுகமாக முடியும்.

முன்னதாக இந்திய அணிக்காக மிக குறைந்த வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான வீரர் சச்சின். 16 வயது 205 நாட்களில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.