தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் புதிய தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம்
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் புதிய தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம் செய்யப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் பொறுப்போடு தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தின் தலைவர் பொறுப்பையும் வாகை சந்திரசேகர் கவனிப்பார் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1980-களில் துணை நடிகராக பணியாற்றிய வாகை சந்திரசேகர் அதன் பிறகு தொடர்ந்து பல்வேறு படங்களில் முக்கிய வேடங்களிலும் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.
இந்நிலையில் அவருக்கு தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.