"வாம்மா நீ தான் என் தங்கச்சி" - தூய்மை பணியாளரை இறுக பற்றிய வைகைப் புயல் - வைரலாகும் வீடியோ
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு காமெடி நடிகர் வடிவேலு நேற்று மாலை 3 மணியளவில் வந்திருந்தார்.
பண்ணாரி அம்மன் கோவிலுக்கு வந்த வடிவேலு
அங்குள்ள அம்மனை தரிசித்த பிறகு, கோவில் அலுவலகத்தில் சிறிது நேரம் உட்கார்ந்து உள்ளார். நடிகர் வடிவேலு பண்ணாரி அம்மன் கோவிலுக்கு வந்த செய்தி சிறிது நேரத்தில் பரவத்தொடங்கியது.

வாம்மா என் தங்கச்சி
அவர் வந்த செய்தியை அறிந்த மக்கள் மற்றும் அங்கிருந்த பக்தர்கள் உடனே அவருடன் புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டினார். இதனைத்தொடர்ந்து அங்கிருந்த துப்புரவு வேலை செய்யும் பெண் ஒருவர் வடிவேலின் காலில் விழுந்து வணங்கினார், இதனைக்கண்ட உடனே அவர் அந்த பெண்ணை தூக்கி விட்டு வாழ்த்தினார்.
இதனையடுத்து அந்த பெண்ணை "வாம்மா நீ தான் என் தங்கச்சி" எனக்கூறி அவருடன் புகைப்படம் ஒன்றை எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கல்முனை பிரபல பாடசாலையில் மாணவர்களிடம் அங்கசேட்டை: பொது சுகாதார பரிசோதகரை கைது செய்ய வலைவீச்சு IBC Tamil
நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்க மக்கள் அளித்த ஆணை : அரசுக்கு நினைவுபடுத்தும் எதிரணி எம்.பி IBC Tamil