எனக்கு துக்கம் தொண்டையை அடைக்கிறது - விவேக் மறைவிற்கு வடிவேலு இரங்கல் வீடியோ

Death Vadivelu Vivek
By mohanelango Apr 17, 2021 08:11 AM GMT
Report

நடிகர் விவேக்கின் திடீர் மரணத்திற்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அவருடைய நெருங்கிய நண்பரும் சினிமாவில் இணைந்து பணியாற்றிய சக நடிகருமான வடிவேலு மதுரையிலிருந்து வீடியோ ஒன்றினை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த வீடியோவில், '' என் நண்பன் விவேக் ஹார்ட் அட்டாக்கினால் இறந்துட்டான் என்று இன்றைக்கு காலையில் செய்திகளில் பார்த்து தெரிந்து கொண்டேன். நான் மதுரையில் இருக்கிறேன். அந்த செய்தியைப் பார்த்ததும் எனக்கு ரொம்ப அதிர்ச்சியாகிவிட்டது.


அதை பற்றி பேசவே முடியவில்லை. அவன் இல்லையே… எனக்கு துக்கம் தொண்டையை அடைக்கிறது. என்னோட அவன் ரொம்ப படங்களில் இணையாக பணியாற்றியிருக்கிறான். அவன் ரொம்ப ஓபன் ஆக பேசக்கூடியவன்.

என்னைவிட ரொம்ப எளிமையாக எல்லோருக்கும் புரியும்படி பேசுவான் மனசை வரும்படியும் பேசுவான். எனக்கு இருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களில் அவனும் ஒருவன். அவனுக்கு நானும் ரசிகன்.

அவனுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்த என்னால் முடியவில்லை. என் நெஞ்சார்ந்த இரங்கலை அவன் குடும்பத்திற்கு தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று நண்பரின் மறைவு செய்தியின் துக்கம் தாளாமல் கண்ணீர் மல்க வடிவேலு வீடியோ வெளியிட்டுள்ளார்.

எனக்கு துக்கம் தொண்டையை அடைக்கிறது - விவேக் மறைவிற்கு வடிவேலு இரங்கல் வீடியோ | Vadivelu Sends Condolence Video For Vivek Death