திமுக ஆட்சி இல்லையெனில் தமிழ்நாடு அழிந்துவிடும் - வடிவேலு பேச்சு
திமுக ஆட்சி இல்லையெனில் தமிழ்நாடு அழிந்துவிடும் என நடிகர் வடிவேலு பேசியுள்ளார்.
தமிழ்நாடு என்ற பெயரே காணாமல் போகிவிடும்
சென்னை கொளத்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் வடிவேலு கலந்து கொண்டார்.
இந்த விழாவில் பேசிய அவர், "முதல்வர் ஸ்டாலின் தொகுதியில் பேச வந்திருப்பது ரொம்ப பெருமையாக உள்ளது. அவருக்கு 73 வயது ஆகிறது என சொன்னாலும் முதல்வரின் செயல்பாடு 37 வயதானவர் போல தான் தெரிகிறது.

திமுகவை அழிக்க வேண்டும் என சொல்கிறார்கள், இதையெல்லாம் அப்புறம் வைத்துக் கொள்ளுங்கள். மக்கள் அழியாமல் இருப்பதற்கு என்ன வழி என்பதை முதலில் யோசியுங்கள்.
திமுகவை அழிக்க வேண்டும் என சொன்னவர்கள் எல்லாரும் காணாமல் போய்விட்டார்கள். திமுக ஒரு சாதாரண சாம்ராஜ்யம் கிடையாது. செயல்பாடுகள் இருக்கும் ஒரே கட்சி திமுக தான்.
திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும். வேறு யாரு வந்தாலும் நம்ம போட்ட திட்டங்கள் அனைத்தும் காலியாகி விடும். தமிழ்நாடு என்ற பெயரே காணாமல் போய்விடும். அதனை தட்டிக்கேட்க கூட எதிர்க்கட்சி பக்கத்தில் யாருமே இல்லை.
தாய் மீது மீது சத்தியம்
எந்த நெருக்கடியையும் சந்திக்கும் தைரியம், தன்னம்பிக்கை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உள்ளது. அவர் ஒரு ஆள் இருப்பதால் தான் தமிழ்நாட்டுக்கும், மக்களுக்கும் பாதுகாப்பாக உள்ளது. மகளிர்,குழந்தைகளுக்கு பாதுகாப்பு உள்ளது.

இந்த கட்சி மட்டும் இல்லையென்றால் என் தாய் மீது சத்தியமாக சொல்கிறேன் நமக்கு கேடு காலமாக மாறிவிடும்" என கூறியுள்ளார்.
அணுசக்தி விவகாரம் : ஈரான் புதிய உச்ச தலைவரின் முடிவால் சூடு பிடித்துள்ள பிராந்திய அரசியல் நிலைமை IBC Tamil