நான் அனாதையாக நிற்கிறேன்.. என் நிலைமைக்கு வடிவேலுதான் காரணம்... - பிரபல நடிகை கண்ணீர்...!

Vadivelu
By Nandhini 2 மாதங்கள் முன்
725 Shares

ஷாக்கான ரசிகர்கள் தனது கணவர் இறந்து விட்டதால் வாழ்வதற்கு வழியில்லாமல் மகளுடன் அனாதையாக நிற்பதாக நடிகை பிரேமா பிரியா தெரிவித்துள்ளார்.

நடிகை பிரேமா பிரியா

தமிழ் சினிமாவில் காமெடியாக நடித்து பிரபலமானவர்தான் நடிகை பிரேமா பிரியா.

இவர் ஏபிசிடி, பம்பரக் கண்ணாலே, இந்திரலோகத்தில் நான் அழகப்பன் உள்பட பல படங்களில் நகைச்சுவை நடிகையாக நடித்துள்ளார்.

இவர் நடிகர் வடிவேலுவுடன் ஏராளமான படங்களில் நகைச்சுவை காட்சிகளில் இணைந்து நடித்திருக்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருடைய கணவர் இறந்து விட்டார். பிரேமா பிரியாவிற்கு ஒரு மகள் உள்ளார்.

vadivelu-prema-priya

என் நிலைமைக்கு வடிவேலுதான் காரணம்... 

இந்நிலையில், சமீபத்தில் ஒரு சேனலுக்கு பிரேமா பிரியா பேட்டி கொடுத்தார்.

அந்த பேட்டியில் அவர் பேசுகையில், என் கணவர் இறந்த பிறகு, சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு வருகிறேன். என் மகளை படித்து வைத்து வருகிறேன். அவரது எதிர்காலம் மட்டுமே என்னிடம் தெரிதாக உள்ளது. எனக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கு நடிகர் வடிவேலுதான் காரணம்.

அவர் ‘சுறா’ படத்தில் நடித்த போது, அவருடன் எனக்கு ஒரு காட்சி இருந்தது. ஆனால் வடிவேலு என்னை அந்த காட்சியில் நடிக்க வேண்டாம் என்று கூறி வேறு ஒரு நடிகையை போட்டார். இதனால் நான் அவரிடம் நேரடியாக சண்டை போட்டேன். நான் சண்டை போட்டதால் எனக்கு சினிமாவில் வாய்ப்பே கிடைக்காமல் போய்விட்டது.

என்னை வடிவேலுவிடம் அறிமுகப்படுத்திய ஆர்டிஸ்ட்க்கும் அவருக்கும் ஏதோ பிரச்சினை இருந்து வந்தது. இதனால், எனக்கு வரும் வாய்ப்பை வடிவேலு தடுத்து வந்தார்.

இதனால் படப்பிடிப்பிலேயே பிரச்சனை இருந்த நிலையில் ஏவிஎம் ஸ்டுடியோவில் ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோர் முன்னிலையிலும் வடிவேலுவை தான் திட்டி விட்டேன்.

இதனால், இப்போதுவரை எனக்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. சமீபத்தில் என் கணவரும் இறந்துவிட்டதால் வாழ்க்கை மோசமாக போய்க்கொண்டிருக்கிறது என்று கண்ணீருடன் பேசினார். 

vadivelu-prema-priya