குடி போதையில் வடிவேலு-முரளி செய்த செயல்.. கடுப்பான விஜயகாந்த் - அடுத்து நடந்த என்ன?
படபிடிப்பில் குடித்துவிட்டு ரகளை செய்த வடிவேலு-முரளியை விஜயகாந்த் மிரட்டிய தகவல் வெளியாகியுள்ளது.
வடிவேலு-முரளி
இயக்குநர் தாஹா இயக்கத்தில் கடந்த 2002ம் ஆண்டு முரளி, வடிவேலு, வினுசக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம்தான் சுந்தரா டிராவல்ஸ். முழுக்க முழுக்க காமெடியால் நிறைந்த இந்த திரைப்படத்திற்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இந்த படத்தினை யுவஸ்ரீ கிரியேஷன்ஸ் தங்கராஜ் தயாரித்தார். தற்போது அவர் இந்த படம் குறித்து பேசிய ஒன்று இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது. அதாவது, படப்பிடிப்பின்போது, முரளியும் வடிவேலும் குடித்துவிட்டு சரியாக படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு வழங்காமல் இருந்துள்ளனர்.
விஜயகாந்த்
இதனால் தயாரிப்பாளர் ஒரு கட்டத்தில் படத்தினை கைவிட்டு விடலாம் என்ற எண்ணத்தில் இருந்துள்ளார். இது தொடர்பாக விஜயகாந்த்தை நேரில் சந்தித்து முறையிட்டுள்ளார். இதை கேட்டு ஆத்திரம் அடைந்த கேப்டன் விஜயகாந்த், படப்பிடிப்புத் தளத்திற்கு நேரடியாக சென்று முரளி மற்றும் வடிவேலு என இருவரையும் கடுமையாக திட்டியுள்ளார்.
படத்தினை ஒழுங்காக நடித்துக் கொடுக்கவில்லை என்றால், தொலைத்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். அதன் பிறகுதான் இருவரும் படத்தை எந்த பிரச்சனையும் செய்யாமல் முடித்துக் கொடுத்ததாக தயாரிப்பளார் தங்கராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்த தகவல்கள் சமூக வலைத்தளப்பக்கத்தில் வேகமாக பரவி வருகிறது.