நடிகர் வடிவேலு நடிக்கும் படத்தின் டைட்டில் இதுதானா? - வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Vadivelu NaaiSekarReturns
By Petchi Avudaiappan Oct 08, 2021 08:01 PM GMT
Report

நடிகர் வடிவேலு நடிக்கும் திரைப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவற்றை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படம் தொடர்பாக நடிகர் வடிவேலு மற்றும் இயக்குநர் ஷங்கரின் எஸ்.பிக்சர்ஸ் நிறுவனத்துடனான பிரச்சனை பேசி சமீபத்தில் தீர்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வடிவேலு மீண்டும் தமிழ் சினிமாவில் முழுவீச்சில் நடிக்க உள்ளார். 

அந்த வகையில் இயக்குநர் சுராஜ் இயக்கவுள்ள படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுக்கிறார். பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிக்கும் இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை வெளியாகியுள்ளது. 

முதலில் இந்தப் படத்துக்கு 'நாய் சேகர்' எனத் தலைப்பு வைக்க முடிவு செய்தார்கள். ஆனால், சதீஷ் நடித்துள்ள படத்துக்கு அந்தத் தலைப்பு வைக்கப்பட்டு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டதால் தலைப்பு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி  வடிவேலு - சுராஜ் கூட்டணி தங்களுடைய படத்துக்கு 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' என தலைப்பை தேர்வு செய்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இதனிடையே படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.