செய்தியாளர் சந்திப்பில் கபடி ஆடி ஓட்டம் பிடித்த நடிகர் வடிவேலு!சுவாரஸ்ய சம்பவம்..
நகைச்சுவை நடிகர் வடிவேலு கொரோனா நிவாரண நிதிக்காக ரூ.5 லட்சத்திற்கான காசோலையை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார்.

பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூடிய விரைவில் நல்லதே நடக்கும். நம்புங்கள். தமிழ்நாடு முதல்வரை சந்தித்தது எனக்கு மிகுந்த நம்பிக்கை அளிப்பதோடு சந்தோசம் தருகிறது. முதல்வராக பொறுப்பு ஏற்ற பின்னர் அவர் மிகவும் சிறப்பாக பணியாற்றுகிறார். அவரின் செயல்பாடு மெய்சிலிர்க்க வைக்கிறது. உலகமே பாராட்டும் வகையில் கொரோனா பரவலை ஸ்டாலின் கட்டுப்படுத்தி இருக்கிறார்.
அவர் என்னுடைய குடும்பத்தில் ஒருவர் போல பேசினார். முதல்வரின் ஆட்சி பொற்காலமான ஆட்சி. பெண்கள் இந்த ஆட்சியில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். மக்கள் வேக்சின் போட தற்போது முன் வந்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிய வடிவேலு மீண்டும் நிறைய திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. விரைவில் நான் ஓடிடியிலும் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
கொங்கு நாடு சர்ச்சை பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு ராம் நாடு, ஒரத்தநாடு எல்லாம் ஏற்கெனவே உள்ளன. தமிழ்நாடு நன்றாக உள்ளது. அதை ஏன் பிரிக்கவேண்டும். இதையெல்லாம் கேட்கும்போது தலை சுற்றுகிறது என்று என்றார்.

இதனையடுத்து தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்துக் கொண்டிருந்த போது தீடிரென கபடி ஆடி அங்கிருந்து ஓடினார்.இந்த காட்சியினால் அந்த பகுதியில் சிறிது நேரம் சிரிப்பலை எழுந்தது.