நடிகர் வடிவேலு எப்படி இருக்கிறார்? - உடல்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

corona Actor Vadivelu Minister Information Ma Subramaniam
By Nandhini Dec 25, 2021 10:33 AM GMT
Report

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு. இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

சமீபத்தில் வடிவேலு மீதான ரெட் கார்டு நீக்கப்பட்டு, அவர் மீண்டும் படங்களில் நடிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து, சுராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்தின், பணிகள் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதன் பிறகு, சாங் கம்போசிங் பணிக்காக, படக்குழுவினருடன் வடிவேலு லண்டன் சென்றார்.

அப்பணிகளை முடித்துவிட்டு, கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்தார். சென்னை வந்த நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வடிவேலுவின் உடல்நிலை குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், ‘நடிகர் வடிவேலுவின் உடல்நிலை சீராக இருக்கிறது. அவருடன் தொடர்பில் இருந்த இயக்குனர் சுராஜ் மற்றும் தயாரிப்பாளருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில், அவர்களுக்கு மரபணு மாற்றம் இருப்பது தெரியவந்துள்ளது. வடிவேலுவுக்கு முதல் நிலை அறிகுறியான S-drop அறிகுறி இருக்கும் காரணத்தினால் பரிசோதனைக்கு அனுப்பி இருக்கிறோம்’ என்றார். Minister Ma Subramaniam gives update about vadivelu health