“என்ன வடிவேலு இப்படி மாறிட்டாரு” - புதிய தோற்றத்தைக் கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி
நடிகர் வடிவேலுவின் புதிய தோற்றத்தைக் கண்டு அவரது ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் காமெடி புயல் என்றழைக்கப்படும் நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பின் ஹீரோவாக “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” என்ற படத்தில் நடித்து வருகிறார். சுராஜ் இயக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
நடிகை ஷிவானி முதன்மை கதாபாத்திரத்தில் இணைந்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வடிவேலுவை மீண்டும் திரையில் காண ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இதனிடையே பிரபல தயாரிப்பாளர் ‘மதுரை’ அன்பு செழியன் நடிகர் வடிவேலுவை தமது இல்ல திருமண விழாவிற்கு அழைப்பு விடுத்து பத்திரிகை கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.