“என் தலைவன் வந்துட்டான்டா” - திடீரென வந்த வடிவேலு ... திக்குமுக்காடி போன படக்குழு

keerthysuresh vadivelu udhayanidhistalin maamannan மாமன்னன்
By Petchi Avudaiappan Mar 14, 2022 04:20 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in திரைப்படம்
Report

நடிகர் வடிவேலு மாமன்னன் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், ஃபகத் பாசில் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கும் படத்திற்கு மாமன்னன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியது.

“என் தலைவன் வந்துட்டான்டா” - திடீரென வந்த வடிவேலு ... திக்குமுக்காடி போன படக்குழு | Vadivelu Joins Maamannan Shooting Spot

  ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கத் திட்டமிட்டு இருக்கும் இப்படத்தில் நீண்ட வருடங்களுக்குப் பின் காமெடி வேடத்தில் வடிவேலு நடிக்க உள்ளார். 

ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் மாமன்னன் படப்பிடிப்பில் வடிவேலு கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. மேலும் படக்குழுவினர் வடிவேலுவுக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வரவேற்றனர்.