கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் வடிவேலுவின் உடல்நிலை குறித்து மருத்துவ நிர்வாகம் புதிய அறிக்கை

comedian vadivelu covid infected health is stable statement from hospital
By Swetha Subash Dec 27, 2021 11:24 AM GMT
Report

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு. இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

சமீபத்தில்  சுராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் சாங் கம்போசிங் பணிக்காக, படக்குழுவினருடன்  லண்டன் சென்றிருந்தார் வடிவேலு.

அப்பணிகளை முடித்துவிட்டு, கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்த நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதனால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வடிவேலுவின் உடல்நிலை சீராக உள்ளது என்றும், விரைந்து குணமடைந்து வரும் வடிவேலு விரைவில் டிஸ்சார்ஜ் ஆகவுள்ளார் எனவும் மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் வடிவேலுவின் உடல்நிலை குறித்து மருத்துவ நிர்வாகம் புதிய அறிக்கை | Vadivelu Health Is Stable Soon To Be Discharged