வடிவேலு வீட்டில் சோகம்....சகோதரர் திடீர் மரணம்
நடிகர் வடிவேலுவின் சகோதரர் ஜெகதீஸ்வரன் இன்று 52வது வயதில் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
வடிவேலு
தமிழ் சினிமாவின் உச்ச காமெடி நடிகராக திகழ்ந்து வந்த வடிவேலு, சிறிது காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். கடந்த சில ஆண்டுகளாக தற்போது மீண்டும் நடிக்க துவங்கியுள்ள அவர், அண்மையில் வெளியான "மாமன்னன்" திரைப்படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து மாபெரும் வரவேற்பை பெற்றார்.
மீண்டும் படங்களில் பிஸியாகி இருக்கும் வடிவேலு, படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்து துவங்கி இருக்கிறார். தற்போது அவர் நடிப்பில் சான்றமுகி 2 திரைப்படம் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், அவரது வீட்டில் திடீர் மரணம் ஏற்பட்டுள்ளது.
திடீர் மரணம்
நடிகர் வடிவேலுவின் சகோதரர் ஜெகதீஸ்வரன். "காதல் அழிவதில்லை" படத்தில் சிம்புவுடன் நடித்திருந்தார். மதுரையில் ஜவுளி வியாபாரம் ஈடுபட்டு வருவதாக கூறப்படும் அவர், உடல் நிலை சரியில்லாத காரணமாக சில காலமாகவே சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
மதுரையிலுள்ள வீரகனூர் பகுதியில் வசித்து வரும் இவர் இன்று உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்த அவருக்கு வயது 52 ஆகும். இவரது மறைவு வடிவேலு குடும்பத்தினரையும் அவரது ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.