வடிவேல், தேவா, கோபி, சுதாகருக்கு போலி டாக்டர் பட்டம்? - அண்ணா பல்கலைக்கழகத்தின் அடுத்த மூவ்

Deva Chennai Vadivelu Anna University
By Thahir Mar 01, 2023 08:13 AM GMT
Report

சினிமா பிரபலங்கள் வடிவேலு, தேவா உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட கௌரவ டாக்டர் பட்டங்கள் போலி என புகார் எழுந்துள்ளது.

போலி டாக்டர் பட்டம் - துணை வேந்தர் பதில் 

கடந்த ஞாயிற்று கிழமை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த போலி டாக்டர் பட்ட விழா குறித்து புகார் அளிக்க உள்ளதாக துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகம் அவர்கள் தான் சிறப்பு விருந்தினர் என கூறி அவர் கையெழுத்திட்டதாக ஒரு கடிதத்தை எங்களிடம் கொடுத்துள்ளனர்.

Vadivel, Deva, Gopi, Sudhakar fake doctorate?

அதனை வைத்து தான் நாங்கள் இந்த விழா நடத்த அனுமதி அளித்தோம். அதே போல, அண்ணா பல்கலைகழகத்தில் விழா நடத்தவுள்ளதாக கூறி முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகம் அவர்களையும் இங்கு வரவழைத்துள்ளனர்.

அதேபோல இங்கு அதிக ஆசிரியர்கள் இல்லாத நேரம் பார்த்து ஞாயிறு பிற்பகல் இந்த விழாவை நடத்தியுள்ளனர் என கூறினார்.

மேலும் இந்த போலி டாக்டர் பட்டம் கொடுத்தது தொடர்பாக நாங்கள் காவல்துறையினரிடம் புகார் அளிக்க உள்ளோம்.

அதே போல, உயர்கல்வித்துறை மற்றும் ஆளுனரிடமும் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க கோர உள்ளோம் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் குறிப்பிட்டார்.