நாளை வெளியாகிறது நடிகர் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தின் டைட்டில் லுக்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அப்படம் பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமைகளை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'கிட்டார் கம்பி மேலே நின்று' என்ற பகுதியிலும் நடித்துள்ளார். 'நவரசா' அந்தாலஜியில் அப்பகுதி இடம் பெற்றுள்ளது.
பாண்டிராஜ் படத்தை அடுத்து சூர்யா இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்தில் நடிக்க உள்ளார். வாடிவாசல் திரைப்படம் வாடிவாசல் என்ற நாவலை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. அதில் ஜல்லிக்கட்டுக்கு முக்கிய இடம் உண்டு என்பது அனைவருக்கும் தெரியும்.
எனவே சூர்யா அதற்காக காளைகளுடன் தீவிரமாக பயிற்சி எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. படத்தின் காட்சிகள் சிறப்பாக அமைவதற்காக காளைகளுடன் பயிற்சி எடுத்து வருகிறார்.
இந்நிலையில் வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக் நாளை மாலை 5.30 மணிக்கு வெளியாக உள்ளதாக கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார்.