போலி ஆவணம் தயாரித்து நிலம் விற்க முயன்ற 7 பேர் கைது
வடபழனியில் போலி ஆவணம் மூலம் நிலம் விற்க முயன்ற 7 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சென்னை வடபழனி எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த கதிரேசன், ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் அம்பத்தூரை சேர்ந்த அமலாபாபதி, ராஜேந்திரன், அருள்ஜோதி ஆகியோரிடம் திருவான்மியூர் வால்மீகி நகரில் உள்ள 37 ஏக்கர் நிலத்தை ரூ.40 கோடிக்கு விற்பனை செய்ய கதிரேசன் அணுகியுள்ளார்.
இதனை தொடர்ந்து, இதற்காக கடந்த மாதம் கிண்டியில் அவர்களுக்கு முன்பணமாக ரூ.5 லட்சம் கொடுத்த கதிரேசன், நில ஆவணங்களின் நகல்களை வாங்கி சோதனையிட்டார்.
அந்த ஆவணங்களின் நகல்கள் அனைத்து போலி என உணர்ந்த கதிரேசன், அவர்கள் மூவர் மீதும் போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மோசடியில் ஈடுபட்ட 7 பேர் கொண்ட கும்பலை அதிரடியாக கைது செய்தனர்.