கொரோனாதடுப்பூசிகளை மாநிலங்களுக்கு வழங்க உரிமையில்லை..இந்திய அரசுக்கு தான் விற்போம்:மாடர்னா நிறுவனம் பதில்!

vaccine Moderna
By Irumporai May 23, 2021 04:58 PM GMT
Report

அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசி நிறுவனத்திடம் கொரோனா தடுப்பூசிகளை நேரடியாக  இந்திய அரசுடன் மட்டுமே ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளது.

பஞ்சாபில் தினசரி  கொரோனா பாதிப்பு 5 ஆயிரமாக உள்ளது .பஞ்சாப் அரசு இதுவரை சுமார் 44 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசிடமிருந்து பெற்றுள்ளது.

தற்போது தடுப்பூசி பற்றாக்குறை நிலவிவருவதால் வெளிநாடுகளிலிருந்து தடுப்பூசிகளை நேரடியாக இறக்குமதி  செய்ய பஞ்சாப் மாநில அரசு திட்டமிட்டது.

இதற்கு பதில் கூறியுள்ள மாடர்னா நிறுவனம் உலகம் முழுவதும் 9 கோடி மக்களுக்கு மாடர்னா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

எங்களுக்கு மாநில அரசுடன் ஒப்பந்தம் போடும் கொள்கையில் இடமில்லை, இந்திய அரசுடன் மட்டுமே நிறுவனம் ஒப்பந்தம் போட முடியும் என கூறியுள்ளது.