தடுப்பூசி வீணாவது தற்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்

india corona tamilnadu
By Irumporai Jun 12, 2021 03:32 PM GMT
Report

தமிழகத்தில் தடுப்பூசி வீணாவது குறைந்துவிட்டது என்றும் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

புனே சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 3 லட்சம் டோஸ்கள் என 4.26 லட்சம் தடுப்பூசிகள் இன்று வந்தடைந்தன. இவற்றை ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த  ராதாகிருஷ்ணன் :

பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் அதிகரித்துள்ளதாக கூறினார். 

மேலும் தற்போது தடுப்பூசி வீணாவது குறைந்துவிட்டதாகவும் முன்பு தடுப்பூசி வீணாவது 13 சதவீதமாக இருந்தது , தற்போது 1 சதவீதமாக உள்ளதாக கூறினார்.

பொதுமக்கள், முன்களப்பணியாளர்கள் உடனடியாக இரண்டாம் கட்ட தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று  தெரிவித்தார்.