தமிழகத்தில் 2 ம் கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

covid chennai covax
By Jon Feb 13, 2021 05:37 PM GMT
Report

தமிழகத்தில் 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி உள்ளது. இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை பொது மக்களுக்கு செலுத்த மத்திய அரசு அனுமதியளித்தது. இதைத்தொடர்ந்து கடந்த 19 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி திட்டம் நடைமுறைக்கு வந்தது. இதை தொடர்ந்து நாடு முழுவதும் முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தமிழகத்தில் முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் மருத்துவர் என்ற அடிப்படையில் அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

தமிழகத்தில் 2 ம் கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம் | Vaccine Tamilnadu Start Corona

இந்நிலையில் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கான 2 ஆம் டோஸ் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஜனவரி 16ல் முதல் டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு 28 நாட்களுக்கு பிறகு 2வது டோஸ் செலுத்தப்படுகிறது.

166 மையங்களில் 3,027 பேருக்கு கோவிஷீல்டு, 99 பேருக்கு கோவாக்சின் என 3,126 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. தமிழகத்தில் 26நாட்களில் இதுவரை 2.27 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.