தடுப்பூசி திட்டம் அழிவை உருவாக்கும்: ராகுல் காந்தி பாய்ச்சல்

 மத்திய அரசின் கொரோனா தடுப்பூசி செயல்திட்டம் அழிவை உருவாக்கும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.

கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. தினசரி 3 லட்சத்திற்கும் அதிகமாக பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.

தினசரி 3 ஆயிரம் பேருக்கு மேல் உயிரிழந்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்துவது மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த ஒரே வழி என்று கூறப்படுகிறது.

இந்திய அரசு தடுப்பூசி போடும் பணியை தற்போது விரைவு படுத்தி இருக்கிறது. இருந்தாலும் தடுப்பூசி பற்றாக்குறை பல மாநிலங்களில் உள்ளது.

இதனால் பல மாநிலங்களில் தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்த முடியவில்லை. இதனால் மத்திய அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில், மத்திய அரசின் கொரோனா தடுப்பூசி செயல்திட்டம் அழிவை உருவாக்கும் என்று ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் அவர், மத்திய அரசின் கொரோனா தடுப்பூசி செயல்திட்டம் அழிவையே உருவாக்கும்.

3 வது அலையை உறுதியான நிலையில் கொரோனா தடுப்பூசி செயல்திட்டம் தேவை என்று அவர் தெரிவித்துள்ளார்.

[RIUCXK ]      

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்