34 மாவட்டங்களில் தடுப்பூசி இல்லை: அதிர்ச்சி தகவல்
தமிழகத்தில் 34 மாவட்டங்களில் தடுப்பூசி இல்லை என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு நிலவரங்களை கண்காணிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பூர்ணலிங்கம் தலைமையில் சுகாதாரத்துறை செயலாளர் உள்பட 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் முதல் கூட்டம் சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் காணொளி காட்சி வாயிலாக இன்று நடைபெற்றது.
ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டில் கொரோனாவின் அடுத்த அலைகளை தடுப்பது குறித்தும், தடுப்பூசி செலுத்துவதை அதிகரிப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும் தமிழ்நாட்டில் 34 மாவட்டங்களில் தடுப்பூசி இல்லை என்றும் நாளை முதல் 13 ஆம் வரை 6.5 லட்சம் தடுப்பூசிகள் வரவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.