நீங்க டீக்கடையில் டீ குடிக்கணுமா ? அப்போ இது முக்கியம் - வெளியானது அதிரடி அறிவிப்பு!
உலகையே அச்சுறுத்திய ஒமைக்ரான் தற்போது இந்தியாவிலும் நுழைந்துவிட்டது. ஒமைக்ரான் எனும் அபாயகரமான புதிய வகை கொரோனா. தமிழ்நாட்டிற்கு மிக நெருங்கிய மாநிலமான கர்நாடகாவில் 2 ஆண்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
சமீபத்தில்தான் இவர்கள் இருவரும் வெளிநாட்டிலிருந்து கர்நாடகா திரும்பினர். சாதாரண கொரோனா வைரஸை விட ஒமைக்ரான் 5 மடங்கு வேகமாகப் பரவக் கூடியது என மத்திய சுகாதார துறை கூறியுள்ளது.
ஆனால் அதே சமயம் பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் இருந்துவிட வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களையும் இவ்வகை வைரஸ் தாக்கும் என்பதால் மிக கவனமாக இருக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
ஒமைக்ரான் வருவதற்கு முன்பே தமிழ்நாடு அரசு 1 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே தியேட்டர்கள், மார்கெட்கள் உள்ளிட்ட பொது இடங்களில் அனுமதி என கூறியது. அதனை தற்போது பல்வேறு மாவட்டங்களும் அமல்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் வேலூர் மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வேலூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள டீக்கடைகள், வங்கிகள், பள்ளி கல்லூரிகள் மற்றும் ஹோட்டல்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் செல்ல அனுமதி கிடையாது.
விதிமுறைகளை பின்பற்றாத பொதுமக்கள் மற்றும் நிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று கிருஷ்ணகிரி ஆட்சியர் இதே அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.