உதகையில் தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள்... தடுப்பூசி தட்டுப்பாட்டால் அதிருப்தி...

Corona vaccine Ooty
By Petchi Avudaiappan May 28, 2021 12:44 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

உதகையில் கொரோனா தடுப்பூசி செலுத்த அதிகாலை முதலே குவிந்த நிலையில் போதிய அளவு தடுப்பூசி வராததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

தமிழகத்தில் கொரோனோ இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணியையும் அரசு முடுக்கி விட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில்

நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மாவட்ட நிர்வாகம் தடுப்பூசியை செலுத்தும் முகாமை நடத்தி வருகிறது.

இதில் உதகை நகரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெறும் தடுப்பூசி முகாமில் குறைந்த அளவே தடுப்பூசி வந்ததால் அங்கு அதிகாலை முதலே டோக்கன்களுடன் குவிந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.