கோவேக்சின் தடுப்பு மருந்தால் பாதிப்பு ஏற்பட்டால் இழப்பீடு வழங்கப்படும்: பார்த் பயோடெக் அறிவிப்பு

world INDIA covaxin
By Jon Jan 18, 2021 05:13 PM GMT
Report

கோவேக்சின் தடுப்பூசியால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால் அதற்கான இழப்பீடு வழங்கப்படும் என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.  உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரசினை தடுக்கும் வகையில் கொரோனா தடுப்பு மருந்து பல்வேறு நாடுகளில் மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளது.

அந்த வகையில் இந்தியாவில் தற்போது கோவேக்சின் தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது முதற்கட்டமாக தடுப்பூசியானது சுகாதார ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதன் படி கோவேக்சின் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட நபருக்கு ஏதேனும் பாதகமான நிகழ்வு ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட நபருக்கு அரசு நியமித்த மருத்துவமனைகளில் மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தரமான பராமரிப்பு வழங்கப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோவேக்சின் தடுப்பூசியால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால் அதற்கான இழப்பீடு வழங்கப்படும் என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.