ஏப்ரல் 11 முதல் தடுப்பூசி திருவிழா - பிரதமர் மோடி அறிவிப்பு
ஏப்ரல் 11 முதல் 14 வரை தடுப்பூசி திருவிழா நடத்தவுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தற்போது வேகமெடுத்து வருகிறது. இத்திரிலிருந்து மக்களை பாதுகாக்க வருகிற ஏப்ரல் 10 தேதி முதல் கடுமையான விதி முறைகள் அமலுக்கு வருகின்றன.
முன்னதாக இந்தியா பிரதமர் மோடி இன்று அணைத்து மாநில முதல்வர்களுடன் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது, சிறிய அளவிலான நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும். 'இரவு நேர ஊரடங்கு’ அமல்படுத்தப்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொடர்பான முன்னெச்சரிக்கையை வெளிப்படுத்த ‘கொரோனா ஊரடங்கு’என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.
நமது ஆலோசனையின் போது இறப்பு விகிதம் பற்றி நாம் விவாதித்தோம். இறப்பு விகிதம் குறைவாக இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ள நோய்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் நாம் வைத்திருக்க வேண்டும். அது உயிரை காப்பாற்ற உதவும்.
ஏப்ரல் 11 முதல் 14-ம் தேதி வரை கொரோனா தடுப்பூசி திருவிழா கொண்டாடலாமா?. இந்த நாட்களில் தகுதியான நபர்கள் எத்தனை பேருக்கு முடியுமோ அத்தனை பேருக்கும் நாம் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும். இந்த நாட்களில் கொரோனா தடுப்பூசிகள் எதையும் வீணாகக்கூடாது என்பதே நமது இலக்கு.
முகக்கவசம் அணிதல் மற்றும் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றுவதின் அவசியம் குறித்து நாம் மீண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
தற்போது நாம் தடுப்பூசி இல்லாமலேயே கொரோனாவுக்கு எதிராக வெற்றிப்பெற்றுள்ளோம் என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். கொரோனா பரிசோதனையை ஊக்கப்படுத்த வேண்டும்.