தடுப்பூசி வழங்குவதில் ஒன்றிய அரசு திணறி வருகிறது! நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு..

Vaccine PTR Palanivel Thiagarajan
By Thahir Jun 28, 2021 07:47 AM GMT
Report

மாநிலங்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் ஒன்றிய அரசு திணறி வருவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

தடுப்பூசி வழங்குவதில் ஒன்றிய அரசு திணறி வருகிறது! நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு.. | Vaccine Covid19 Tamilnadu

மதுரை கீழ வைத்தியநாதபுரம் பகுதியில் இலவச தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த நிதியமைச்சர் அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,உலக அளவில் கொரோனா தொற்று நோய்க்கு தீர்வாக இருப்பது தடுப்பூசிதான். குறிப்பாக தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் அதிக அளவில் இருந்தாலும், ஒன்றிய அரசு அவர்களுக்கு வாய்ப்பு அளிக்காத சூழ்நிலையை உருவாக்கி வருகிறது. மிகச் சிரமத்திற்குப் பிறகு தான் தடுப்பூசியை மாநில அரசுகள் பெற்று வருகிறோம். மாநிலங்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் ஒன்றிய அரசு குளறுபடி செய்துள்ளது, மாநிலங்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் ஒன்றிய அரசு திணறி வருகிறது" எனத் தெரிவித்தார்.

முன்னர் தமிழகத்தில் தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதில் பொதுமக்கள் தயக்கம் காட்டி வந்தனர். தற்போது தடுப்பூசியின் விழிப்புணர்வு பல்வேறு வகையில் முன்னெடுத்த அதன் விளைவாக தற்போது பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இரண்டாவது அலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மே மாதத்தில் பரிசோதனை முடிவுகள் 20 சதவீதமாக இருந்த கொரோனா தொற்று தற்போது ஒரு சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு நிரந்தரமான தீர்வு 100% தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே சாத்தியமாகும். விரைந்து அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்யப்பட்டு வருகிறது.