கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்

vaccine corona dmk stalin
By Jon Mar 09, 2021 02:21 PM GMT
Report

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. முதலில் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. அதற்குப் பின்னர் மார்ச் 1 முதல் 65 வயதிற்கும் அதிகமானவருக்கும் உடல் குறைபாடு உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.

கொரோனாவின் அடுத்த கட்ட பரவல் தொடங்கிவிட்ட நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக பிரதமர் தொடங்கி பல்வேறு அரசியல்வாதிகளும் பிரபலங்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆரம்பித்தனர்.

இது மக்கள் மத்தியில் தடுப்பூசி மீதுள்ள நம்பகமின்மையை போக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இதனை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், “#CovidVaccine முதல் தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டேன்.

குறுகிய காலத்தில் சளைக்கா முயற்சிகளால் நமக்கு வெற்றிகரமாகத் தடுப்பூசியைக் கொடுத்த அறிவியல் சமுதாயத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. தொடர்ந்து நலத்தோடும் பாதுகாப்போடும் இருப்பதற்கான நடவடிக்கைகளை நாம் அனைவரும் மேற்கொள்வோம்.”