கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 3 பேருக்கு மயக்கம்: தஞ்சையில் பரபரப்பு
இந்தியாவில் முதல் கட்டமாக மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களுக்கு முறையான வழிமுறைகளை பின்பற்றி தடுப்பூசி போடப்பட்டது. இதற்கு பிறகு, 2-வது தவணையாக 28 நாட்களுக்கு பிறகு, மீண்டும் செலுத்த முடிவு செய்யப்பட்டு, இன்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதில், மொத்தம் 3, 126 சுகாதார பணியாளர்களுக்கு இன்று 2வது 'டோஸ்' தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பமானது.
இந்த நிலையில் தஞ்சை மருத்துவ கல்லூரியில் தடுப்பூசி போட்டு கொண்ட 3 பேருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டது.
இதனால், அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று 2வது டோஸ் போட்டு கொள்ள முடியாது என அவர்கள் மூவரும் மறுத்த நிலையில், மருத்துவ கல்லூரி நிர்வாகம்தான் அவர்களுக்கு வலுக்கட்டாயமாக ஊசியை போட்டதாக பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.