தடுப்பூசி போட்ட குழந்தை 3 மணிநேரத்தில் மரணம்: கதறிய பெற்றோர்
தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 3 மாத ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரியை சேர்ந்த தம்பதியினர் பிரசாத்- விஜயலட்சுமி, இவர்களுக்கு 21/2 வயதில் குழந்தையும், 3 மாத ஆண் குழந்தையும் உள்ளது. கடந்த ஒருவாரமாக குழந்தைக்கு சளி தொல்லை அதிகம் இருந்துள்ளது, இதனையடுத்து விஜயலட்சுமி தன்னுடைய குழந்தையை அங்கன்வாடி மைய மருத்துவ முகாமுக்கு சென்றுள்ளார்.
அங்குள்ள நர்சிடம் குழந்தையை காண்பித்த போது, 2½ மாதத்தில் போட வேண்டிய தடுப்பூசி போட்டீர்களா என கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் இல்லை என்று கூறவே அந்த நர்சு குழந்தைக்கு தடுப்பூசி போட்டுள்ளார், மேலும் சளிக்கான மருந்தையும் கொடுத்துள்ளார். இதை வாங்கி கொண்டு விஜயலட்சுமி வீட்டுக்கு வந்துவிட்டார், இருப்பினும் குழந்தையின் உடல்நிலையை முன்னேற்றமில்லை.
பால் குடிக்காமல் அழுது கொண்டே இருந்ததால், சளிக்கான மருந்தை கொடுத்துள்ளார், குழந்தையும் அயர்ந்து தூங்கியது. மாலையில் குழந்தையை எழுப்பிய போது, அசைவற்று கிடந்துள்ளது, இதனால் பதறிப்போன பெற்றோர் குழந்தையை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அவர்களோ அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறியுள்ளனர், அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதைக்கேட்டதும் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி அழுதனர், தொடர்ந்து வழக்கு பதிவு செய்துள்ள சிங்காநல்லூர் போலீசார், குழந்தை இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதவிர குழந்தைக்கு போடப்பட்ட தடுப்பூசி மற்றும் சளி மருந்தையும் ஆய்வு செய்து வருகின்றனர்.