3 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் தமிழகம் வந்தடைந்தது!
தமிழகத்திற்கு மேலும் 3,10,000 டோஸ் கோவாக்சீன் தடுப்பூசிகள் 1,179 கிலோ எடையில் 62 பாா்சல்களில் இன்று காலை விமானத்தில் ஹைதராபாத்திலிருந்து சென்னை வந்தடைந்தன.

இந்நிலையில் ஹைதராபாத்திலிருந்து இன்று காலை சென்னை வந்த புளூ டாா்ட் கொரியா் விமானத்தில் 3,10,000 டோஸ் கோவாக்சீன் தடுப்பூசிகள் 1,179 கிலோ எடையில் 62 பாா்சல்களில் சென்னை பழைய விமானநிலையம் வந்தடைந்தன. அதன்பின்பு தடுப்பூசி பாா்சல்களை தமிழ்நாடு அரசு அதிகாரிகளிடம் சென்னை விமானநிலைய அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

அதில் 2,21,090 டோஸ் தடுப்பூசிகள் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலகத்திற்கும்,88,910 டோஸ் தடுப்பூசிகள் சென்னை பெரியமேட்டில் உள்ள ஒன்றிய
அரசின் தொகுப்பு மற்றும் தனியாா் மருத்துவமனைகளுக்கும் அனுப்பப்பட உள்ளன.
அம்மாவான பின்னும் குறையாத இளமை... sleeveless ஜாக்கெட்டுடன் ரசிகர்களை கிறங்கடிக்கும் VJ அஞ்சனா! Manithan
எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும் அதிர்ஷ்டம் கொண்ட டாப் 3 ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan