கூட்ட நெரிசலால் திணறிய போலீஸ் - தடுப்பூசி மையத்திற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு!
கரூர் மாவட்டத்தில் கோவாக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசி இன்று பொதுமக்களுக்கு செலுத்தப்படுகிறது. மாவட்டத்தில் நான்கு மையங்களில் 1200 தடுப்பூசிகள் இன்று செலுத்தப்படுகிறது.
இதனால் ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி கொண்டிருந்தனர். இதனை தொடர்ந்து மக்களின் கூட்டம் நேரத்திற்கு நேரம் அதிகமானதால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
மக்கள் கூட்டம் கூட்டமாக அலைமோதியதால் போலீசார் திணறினர். இதையடுத்து பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தடுப்பூசி மையத்திற்கு பூட்டு போட்டு சென்று விட்டனர்.
இதனால் பொதுமக்கள் காத்திருப்பு வீணாகிவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அங்கேயே கூச்சலிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பள்ளி பணிக்கு வந்த ஆசிரியர்களும், கதவு பூட்டப்பட்டிருப்பதால் உள்ளே செல்ல இயலாமல் அவதிக்குள்ளாகினர்.