கொரோனா தடுப்பூசியை இவர்கள் போடக்கூடாது! விழிப்புணர்வு தகவல்

india corona virus
By Jon Jan 20, 2021 04:07 PM GMT
Report

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி 16ம் தேதி முதல் போடப்பட்டு வருகிறது, தடுப்பூசி போட்டுக்கொண்ட இருவர் மரணமடைந்துள்ள நிலையில், பலரும் தடுப்பூசி போட தயக்கம் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் புனே இந்திய சீரம் நிறுவனம் வெளியிடுள்ள அறிக்கையில், கோவிஷீல்டு தடுப்பூசியில் எல்-ஹிஸ்டைடின், எல்-ஹிஸ்டைடின் ஹைட்ரோகுளோரைடு மோனோஹைட்ரேட், மெக்னீசியம் குளோரைடு ஹெக்ஸாஹைட்ரேட், பாலிசார்பேட் 80, எத்தனால், சுக்ரோஸ், சோடியம் குளோரைடு, டிசோடியம் எடிட்டேட் டைஹைட்ரேட் (ஈடிடீஏ), தண்ணீர் ஆகியவை அடங்கி உள்ளன.

இந்த தடுப்பூசியில் அடங்கியுள்ள மருந்துப்பொருட்களுக்கு ஒவ்வாமை (அலர்ஜி) உடையவர்கள், கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளக்கூடாது. குறிப்பாக தடுப்பூசி போடும் முன் ஒவ்வாமை குறித்து சுகாதார பணியாளரிடம் கண்டிப்பாக கூறிவிடுங்கள், கர்ப்பமாக இருந்தாலும், கர்ப்பம் தரிக்க திட்டமிட்டிருந்தாலும், தாய்ப்பால் ஊட்டினாலும் கூறிவிடுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காய்ச்சல் இருந்தால், ரத்த கோளாறு இருந்தால், நோய் எதிர்ப்புச்சக்தி குறைவாக இருந்தால், நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்தினால் நோய் எதிர்ப்புச்சக்தி குறையும் நிலை இருந்தால் அது பற்றியும் தெரிவித்துவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.