இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நபர் உயிரிழப்பு

vaccine dead men
By Jon Jan 18, 2021 06:10 PM GMT
Report

உத்தரபிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது, இதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

அவர்கள் 447 பேருக்கு லேசான பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்ட வார்டு பாய் மகிபால் சிங் திடீரென உயிரிழந்துள்ளார், அவருக்கு வயது 46. முரடாபாத் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மகிபால் சிங்குக்கு, 16ம் தேதி மதியம் மருத்துவமனையில் வைத்து கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அடுத்த நாள் இரவு பணியை முடித்து சென்ற மகி பாலுக்கு திடீரென நெஞ்சுவலியும் மூச்சு திணறலும் ஏற்பட்டதாக தெரிகிறது. அதைத் தொடர்ந்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தபோதும் சிறிது நேரத்தில் அவர் மரணம் அடைந்துவிட்டார்.

மகிபால் உயிரிழப்பிற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல அல்ல என்று உத்தரப் பிரதேச முதன்மை மருத்துவ அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். அதே நேரம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட மருத்துவ பணியாளர் ஒருவர் 24 மணி நேரத்தில் திடீரென உயிரிழந்து இருப்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் தீவிரமாக பரிசோதித்து வருகின்றனர்.