உங்க உதவிய அமெரிக்கா மறக்காது.. கூடிய சீக்கிரம் கொரோனாவ துரத்துவோம்: ஆண்டனி பிளிங்கன்

DrSJaishankar SecBlinken
By Irumporai Jul 28, 2021 03:41 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா அளித்த உதவிகளை அமெரிக்கா என்றும் மறக்காது என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இரு நாட்கள் அரசுப் பயணமாக இந்தியா வருகைபுரிந்தார்.

டெல்லியில் இன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசிய ஆண்டனி இருநாட்டின் ராணுவம், பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பிக்கு பிறகு இரு வெளியுறவு அமைச்சர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, இருநாட்டின் உறவை மேலும் வலுப்படுத்த விரும்புவதாக ஆண்டனி பிளிங்கன் கூறினார். மேலும் கொரோனா முதல் அலையில் அமெரிக்கா சிக்கியபோது அதனை எதிர்கொள்ள இந்தியா அளித்த உதவிகளை அமெரிக்கா என்றும் மறக்காது என கூறினார்

 இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து கொரோனா அச்சுறுத்தலுக்கு முடிவுகட்டும் என தெரிவித்தார்.

அதை தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், கொரோனா 2வது அலையின்போது இந்தியாவிற்கு உதவியதற்காக அமெரிக்காவிற்கு நன்றி தெரிவித்தார்.

தடுப்பூசி உற்பத்திக்கான மூலப்பொருட்கள் விநியோகத்தை தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொடங்கி வைத்திருப்பது வரவேற்கத்தக்கது என கூறினார்.

மேலும் அமெரிக்காவுடன் இந்தியா இணைந்து உலகளவில் தடுப்பூசி உற்பத்தி செய்ய கவனம் செலுத்தும் என கூறினார்.