நாளை முதல் தடுப்பூசி போடும் பணி தொடரும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

vaccination ministersubramanian
By Irumporai Jun 01, 2021 12:16 PM GMT
Report

ராஜீவகாந்தி அரசு மருத்துவமனையில், தமிழக மருத்துவத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் அவர்கள், கருப்பு பூஞ்சை சோதனை மையத்தை திறந்து வைத்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து  பேசிய அமைச்சர் :

தமிழகத்தில் இதுவரை 518 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ,கருப்பு பூஞ்சை எதனால் வருகிறது என்பது குறித்து ஆய்வு செய்ய 13 வல்லுநர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், 4.20 லட்சம் தடுப்பூசிகள் இன்று வருவதால், நாளை முதல் தொடர்ந்து தடுப்பூசி போடப்படும். 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெறும் என கூறினார்.

தமிழகத்தில் ஜூன் 3-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு தடுப்பூசி போடப்படாது என அறிவிக்கப்பட்ட  நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.